ADDED : அக் 16, 2026 07:57 PM
அ நிறம் | அளவு
வாலாஜாபாத்: சூரிய சக்தியை பயன்படுத்தி, தனிநபர் வீடுகளுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு, 30 பேர் காஞ்சிபுரம் தெற்கு கோட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.
சூரிய சக்தியை பயன்படுத்தி தனிநபர் வீடுகளுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு, மனுக்கள் பதிவு செய்யும் முகாம், நேற்று வாலாஜாபாதில் நடந்தது.
இந்த முகாமிற்கு, காஞ்சிபுரம் தெற்கு கோட்ட செயற்பொறியாளர் செல்வம் தலைமை வகித்தார். இந்த முகாமில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சூரிய சக்தியை பயன்படுத்தி தனிநபர் வீடுகளுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு, 30 பேர், மின்வாரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்து, பதிவு செய்துள்ளனர். இதில், வாலாஜாபாத் துணைமின் நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
