/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேலை வாய்ப்பு முகாமில் 3,054 பேருக்கு பணி ஆணை
/
வேலை வாய்ப்பு முகாமில் 3,054 பேருக்கு பணி ஆணை
ADDED : ஜூன் 15, 2025 07:57 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த, தனியார் நிறுவனங்களுக்கான வேலை வாய்ப்பு முகாமில், 3,054 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் சார்பில், காஞ்சிபுரம் கா.மு.சுப்பராய முதலியார் மேல்நிலைப் பள்ளியில் நடந்த, தனியார் நிறுவன வேலை வாய்ப்பு முகாமிற்கு ரோட்டரி மாவட்ட தொழில் பணி இயக்குனர் முருகேஷ் தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி, ரோட்டரி மாவட்டம் ஆளுநர் ராஜன் பாபு ஆகியோர் வேலை வாய்ப்பு முகாமை துவக்கி வைத்தனர்.
இம்முகாமில் 79 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு தகுதியுள்ள இளைஞர்கள், இளம் பெண்களை தேர்வு செய்தது.
இதில், 8ம் வகுப்பு முதல், பட்ட படிப்பு, ஐ.டி.ஐ., பட்டயம் படித்த 18 - 35 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் என, மொத்தம், 4,526 பேர் பங்கேற்றனர். இதில், 3,054 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
முகாமின் நினைவாக சுப்பராய முதலியார் பள்ளிக்கு 10 மின் விசிறியும், 10 மின் விளக்குகளும் வழங்கப்பட்டன.