/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வைப்பூர் முகாமில் 325 மனுக்கள் ஏற்பு
/
வைப்பூர் முகாமில் 325 மனுக்கள் ஏற்பு
ADDED : ஆக 06, 2025 10:11 PM
ஸ்ரீபெரும்புதுார்:வைப்பூர் ஊராட்சியில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில், மக்களிடமிரு ந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 325 மனுக்கள் பெறப்பட்டன.
வைப்பூர் ஊராட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம், நேற்று முன்தினம் நடந்தது. ஊராட்சி தலைவர் சுமதி தலைமை தாங்கினார். குன்றத்துார் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி முன்னிலை வகித்தார்.
மகளிர் உரிமை தொகை, மின் இணைப்பு, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பட்டா பெயர் மாற்றம் என, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, துறை சார்ந்த அதிகாரிகளிடம் மக்கள் வழங்கினர்.
அந்த வகையில், மகளிர் உரிமை தொகை கோரி 165 விண்ணப்பங்கள் உட்பட, மொத்தம் 325 மனுக்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டன.