/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குறைதீர் கூட்டத்தில் 336 பேர் மனு ஏற்பு
/
குறைதீர் கூட்டத்தில் 336 பேர் மனு ஏற்பு
ADDED : மே 20, 2025 12:58 AM
காஞ்சிபுரம், மே 20--
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பட்டா, உதவித்தொகை, வேலைவாய்ப்பு, ஆக்கிரமிப்பு அகற்றம் என, பல்வேறு வகையிலான கோரிக்கை தொடர்பாக, 336 பேர் மனு அளித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மூன்று மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு 3.09 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்
மாற்றுத்திறனாளி பயனாளிகள் 11 பேருக்கு, 88,000 ரூபாய் மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும், 10 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு 1.30 லட்ச ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்களும் வழங்கப்பட்டன.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், செம்மொழி நாளையொட்டி நடைபெற்ற கட்டுரை மற்றும் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - -மாணவியருக்கு காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.