ADDED : ஏப் 08, 2026 10:26 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், 36 வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை, குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, தமிழகத்தில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான ஹோட்டல்கள் விறகு அடுப்பிற்கு மாறி வருகின்றன. காஸ் சிலிண்டர் கிடைக்காததால், சிறிய ஹோட்டல்கள் மற்றும் சாலையோர உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, வீட்டு உபயோக சிலிண்டர்களை சில உணவகங்கள் பயன்படுத்தி வருவதாக, திருவள்ளூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்டம் முழுதும் உள்ள சாலையோர உணவகங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதுவரை 36 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் தெரிவித்தனர்.
