/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீர ஆஞ்சநேயருக்கு 37வது ஆண்டு விழா
/
வீர ஆஞ்சநேயருக்கு 37வது ஆண்டு விழா
ADDED : டிச 08, 2025 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், யதோக்தகாரி பெருமாள் கோவில் பின்புறம், திருவள்ளுவர் தெருவில், வீர ஆஞ்ச நேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 37வது கும்பாபிஷேக ஆண்டு விழா நேற்று நடந்தது.
கும்பாபிஷேக ஆண்டு விழாவையொட்டி, நேற்று, காலை 9:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 1:00 மணிக்கு சந்தனகாப்பு அலங் காரமும் நடந்தது.
மேலும், ராஜ அலங்கார தரிசனமும், மஹாதீப ஆராதனையும் நடந்தது. அதை தொடர்ந்து, மதியம் 1:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாட்டை விழாக்குழுவினர், பக்தர்கள், திருவள்ளுவர் தெரு வினர் இணைந்து செய்திருந்தனர்.

