/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அடுத்தடுத்து 4 வீட்டில் திருட்டு
/
அடுத்தடுத்து 4 வீட்டில் திருட்டு
ADDED : நவ 13, 2024 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:குன்றத்துாரை அடுத்த தரப்பாக்கம், கோல்டன் பேரடைஸ், கிருஷ்ணா கார்டன் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, அடுத்தடுத்து நான்கு வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டதாக, குன்றத்துார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்று விசாரித்த போது, முருகன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் திருடப்பட்டது தெரிந்தது.
இதேபோல, உபேந்திரா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, 50,000 ரூபாய் திருடப்பட்டுள்ளது. மேலும் இரு வீடுகளில் பொருட்கள் ஏதும் இல்லாததால், திருடு போகவில்லை என தெரிந்தது.
குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.