/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 405 மனுக்கள் ஏற்பு
/
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 405 மனுக்கள் ஏற்பு
ADDED : டிச 23, 2025 01:42 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கை தொடர்பாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம், 405 பேர் நேற்று மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங் கில், காஞ்சிபுரம் கலெக்டர் தலைமையில் நேற்று காலை நடந்தது.
இதில் பட்டா, வேலைவாய்ப்பு, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 405 பேர் மனு அளித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். 60 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து கலெக்டரி டம் ஜீவா என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
உத்திரமேரூர் தாலுகா, வளத்தோடு கிராமத்தில் வசிக்கிறேன். எனது நண்பர்கள் மூவர், தங்களின் டிராக்டர்களை வாடகைக்கு விடுவதாக தெரிவித்திருந்தனர். அதன்படி, பேஸ்புக்கில் டிராக்டர் வாடகை விடுவதாக நாங்கள் விளம்பரம் செய்திருந்தோம்.
அதை கண்ட சேலத்தைச் சேர்ந்த பீட்டர் அனாசீன் ராஜ் என்ற நபர், கடந்த 2024 நவம்பர் மாதம் தொடர்பு கொண்டு, 3 டிராக்டர்களை எங்களிடம் இருந்து வாடகைக்கு எடுத்து சென்றார். இரண்டும் மாதங்களாக, தலா 30,000 ரூபாய் வாடகை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து, அவர் வாடகையையும் செலுத்தாமல், டிராக்டர்களோடு தலைமறைவாகி விட்டார். 3 டிராக்டர்களின் மதிப்பு, 20 லட்சம் ரூபாய்.
இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளித்தேன். டிராக்டர்களையும், தலைமறைவான நபரையும் கண்டறியவில்லை. வாடகைக்கு நான் பரிந்துரை செய்ததால், எனது வாகனங்களை நண்பர்கள் எடுத்து சென்று விட்டனர்.
இதனால், மன உளைச்சலில் இருக்கிறேன். டிராக்டர்களை வாடகைக்கு எடுத்து சென்று தலைமறைவான நபரை போலீசார் பிடித்து, டிராக்டர்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

