/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 467 வழக்குகளுக்கு தீர்வு
/
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 467 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 467 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 467 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : டிச 14, 2024 10:25 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சந்திரசேகரன் அறிவுறுத்தலின்படி, நேற்று காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.
முதன்மை சார்பு நீதிபதியும், வட்ட சட்ட பணிகள் குழு தலைவருமான அருண்சபாபதி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கூடுதல் சார்பு நீதிபதி திருமால், நீதித்துறை நடுவர் வாசுதேவன், பயிற்சி நீதித்துறை நடுவர்கள், வழக்கறிஞர்கள் என, பலரும் பங்கேற்றனர்.
இதில், மோட்டார் வாகன விபத்துகள், அசல் வழக்கு, வங்கி வாராக்கடன், காசோலை வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, குடும்ப நல வழக்கு, தொழிலாளர் நல வழக்குகள் என, மொத்தம் 447 வழக்குகள்ளுக்கு தீர்வு காணப்பட்டது.
இதில், இழப்பீடு தொகையாக, 10.44 கோடி ரூபாய் ரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. 20 வங்கி வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 13.3 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.