sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பூஞ்சோலை கன்னியம்மனுக்கு 46வது ஆண்டு ஆடி திருவிழா

/

பூஞ்சோலை கன்னியம்மனுக்கு 46வது ஆண்டு ஆடி திருவிழா

பூஞ்சோலை கன்னியம்மனுக்கு 46வது ஆண்டு ஆடி திருவிழா

பூஞ்சோலை கன்னியம்மனுக்கு 46வது ஆண்டு ஆடி திருவிழா


ADDED : ஜூலை 15, 2025 09:45 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 09:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், பூஞ்சோலை கன்னியம்மன் கோவிலில் 46வது ஆண்டு ஆடி திருவிழா, நாளை மறுநாள் நடக்கிறது.

காஞ்சிபுரம், ராயன்குட்டை பள்ளத்தெருவில் உள்ள பூஞ்சோலை கன்னியம்மன் கோவிலில் 46வது ஆண்டு ஆடி திருவிழா நாளை மறுநாள் நடக்கிறது.

விழாவையொட்டி நாளை காலை 6:00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரமும், மாலை 5:00 மணிக்கு காஞ்சி பூஞ்சோலை கன்னியம்மன் மண்டலி குழுவினரின் லலிதா சஹஸ்ரநாமம், சவுந்தர்யலஹரி பாராயணமும், தீபாராதனையும் நடக்கிறது.

நாளை மறுநாள் காலை 7:00 மணிக்கு பூங்கரக அலங்காரமும், அம்மன் வீதியுலாவும், காலை 11:00 மணிக்கு பச்சையம்மன் பம்பை, உடுக்கை கைச்சிலம்பாட்ட குழுவினர் மூலம் அம்மன் வர்ணிப்பும், மாலை 3:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது.

பின், மூலவர் கன்னியம்மன் மகாசண்டி தேவி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

மாலை 6:00 மணிக்கு அம்பாள் வர்ணிப்பும், கும்ப பூஜையும், இரவு 7:00 மணிக்கு மஹாதீப ஆராதனையும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாட்டை விழா குழுவினர், கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us