ADDED : ஆக 24, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்றதாக, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை அருகே கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக, சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு போலீசார் ரோந்து பணி செய்த போது, அங்கு கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததாக, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முஸ்தபா, 27; இம்தியால், 23; ஹேமநாதன், 24. ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல, மொட்டைக்குளம் அருகே கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததாக, கோபிநாத், 22, மற்றும் குணா, 24 ஆகிய இரண்டு பேரையும், விஷ்ணுகாஞ்சி போலீசார் கைது செய்தனர்.