ADDED : ஜன 12, 2024 10:16 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த கிளாய் பகுதியில், கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கிளாய் முந்திரி தோப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஐந்து பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
பின், அவர்களின் உடைமைகளை சோதனை செய்ததில், 1.50 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது.
விசாரணையில், கிளாயை சேர்ந்த செல்வகுமார், 26, ஸ்ரீபெரும்புதுாரை சேர்ந்த சண்முகபிரியன், 20, ராமச்சந்திரன், 30, சூராக்காய்புரத்தை சேர்ந்த கார்த்திகேயன், 26, தென்காசியை சேர்ந்த விக்னேஷ், 22, என தெரிந்தது.
இதை தொடர்ந்து, அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், 1.50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.