ADDED : மே 15, 2026 02:56 AM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்: கொலை வழக்கில் தொடர்புடைய ஐந்து பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையம் கொலை வழக்கில் தொடர்புடைய, செவிலிமேடு பகுதியைச் சேர்ந்த முருகவேல், 26, ஆதி என்கிற அன்பு, 21, ஜனகுமார், 21, மணிபாரதி, 23. பல்லவன் நகரைச் சேர்ந்த தனுஷ், 21, ஆகிய ஐந்து பேரை கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர். அவர்களுக்கு, ஒராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, காஞ்சிபுரம் எஸ்.பி., ஜவகர் என்பவர், காஞ்சிபுரம் கலெக்டர் சினேகாவிற்கு பரிந்துரை செய்தார். ஐந்து பேரையும், ஒரு ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க ஆணை வழங்கப்பட்டது.
இதையடுத்து, காஞ்சிபுரம் தாலுகா போலீசார், வேலுார் சிறை நிர்வாகத்திடம், குண்டர் தடுப்பு சட்டத்திற்குரிய ஆணை ஒப்படைத்தனர்.
