/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு
/
பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு
ADDED : நவ 11, 2025 10:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்: குன்றத்துார் அருகே இரண்டாம் கட்டளை ஊராட்சி, கஜலட்சுமி நகரை சேர்ந்தவர் கவுசல்யா, 70. அதே பகுதியில் உள்ள பஜனை கோவில் தெருவில், நேற்று முன்தினம் மாலை நடைபயிற்சி சென்றார்.
அப்போது, அங்கு பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர், முகவரி கேட்பது போல் நடித்து, கவுசல்யா அணிந்திருந்த, 5 சவரன் தங்க செயினை பறித்து, கவுசல்யாவை கீழே தள்ளிவிட்டு தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற குன்றத்துார் போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து, குற்றவாளியை தேடி வருகின்றனர்.

