/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கஞ்சா கடத்திய இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை
/
கஞ்சா கடத்திய இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை
ADDED : ஜன 31, 2024 10:37 PM
சென்னை:கஞ்சா கடத்திய வழக்கில் இரண்டு பேருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 50,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
சென்னை பிராட்வே அருகே உள்ள கொண்டி செட்டி தெரு, பிலிப்ஸ் தெரு சந்திப்பு பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற, அதே பகுதியைச் சேர்ந்த அப்பன்ராஜ், 45, மினேஷ்குமார், 25, ஆகியோரை, எஸ்பிளனேடு போலீசார், 2015ம் ஆண்டு, ஆக., 3ல் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.திருமகள் முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, 'அப்பன்ராஜ், குரு ஆகிய இரண்டு பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளன.
எனவே, இரண்டு பேருக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது' என தீர்ப்பளித்தார்.