/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரேஷன் கடை பணியாளர்கள் 500 பேர் வேலை நிறுத்தம்
/
ரேஷன் கடை பணியாளர்கள் 500 பேர் வேலை நிறுத்தம்
ADDED : அக் 22, 2024 07:42 AM
காஞ்சிபுரம் : ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு இருமடங்கு அபராதம் விதிப்பதை ரத்து செய்வது; ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்களை இறக்கி விற்பனை குறியீடு நிர்ணயம் செய்வதை கைவிடுதல் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற, அக்.,21 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட தலைவர் சேரன், செயலர் ஜெய்சங்கர், பொருளாளர் கண்ணபிரான் ஆகியோரது தலைமையில், மாவட்ட அளவில், 500க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று பங்கேற்றனர்.
அந்தந்த ஒன்றியங்களில் பணியாளர்கள், தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

