/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
5,000 பனை விதைகள் தேவரியம்பாக்கத்தில் நடவு
/
5,000 பனை விதைகள் தேவரியம்பாக்கத்தில் நடவு
ADDED : நவ 04, 2025 10:15 PM
காஞ்சிபுரம்: தேவரியம்பாக்கத்தில், 5,000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
தேவரியம்பாக்கம் ஊராட்சியில், நேற்று பனை விதை நடும் பணியை துவக்கி வைத்து, ஊராட்சி தலைவர் அஜய்குமார் பேசியதாவது:
ஏரிக்கரையோரம், பனை விதை நடவு என்பது வெறும் பசுமைக்குரிய முயற்சி மட்டுமில்ல; பல்லுயிர்களின் இனப்பெருக்கத்திற்கு வித்திடும் செயல். ஏற்கனவே, 25 ஏக்கர் தரிசு நிலத்தில், தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் ஊராட்சியில் குறுங்காடு அமைத்துள்ளோம்.
கிராம மக்களின் கூட்டு முயற்சியால், மரக்கன்றுகள் பசுமையாக வளர்ந்து, நல்ல பலன் கொடுக்க துவங்கியுள்ளது.
இதனால், புவி வெப்பமயமாகுதல், காற்று மாசு இல்லாமல், இயற்கை சுவாசத்திற்கு வழி வகுக்கும். வீடுகள்தோறும், மரக்கன்றுகளை நட்டு பசுமை பரப்பை அதிகரிக்க செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

