sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் 55 கி.மீ.,யில் புதிய சாலை மழைக்காலம் முடிந்தவுடன் பணி துவக்கம் ரூ.56.45 கோடி ஒதுக்கீடு

/

காஞ்சியில் 55 கி.மீ.,யில் புதிய சாலை மழைக்காலம் முடிந்தவுடன் பணி துவக்கம் ரூ.56.45 கோடி ஒதுக்கீடு

காஞ்சியில் 55 கி.மீ.,யில் புதிய சாலை மழைக்காலம் முடிந்தவுடன் பணி துவக்கம் ரூ.56.45 கோடி ஒதுக்கீடு

காஞ்சியில் 55 கி.மீ.,யில் புதிய சாலை மழைக்காலம் முடிந்தவுடன் பணி துவக்கம் ரூ.56.45 கோடி ஒதுக்கீடு


ADDED : நவ 08, 2024 09:45 PM

Google News

ADDED : நவ 08, 2024 09:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:தமிழகம் முழுதும் பல்வேறு மாவட்டங்களில், ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், புதிய சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

இதற்கான பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற வடக்கு மாவட்டங்களில், சாலை திட்ட பணிகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் துவக்கியுள்ளனர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களிலும், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை, இதர சாலை என, மொத்தம், 2,253 கி.மீ., துார சாலைகள் உள்ளன.

இதுதவிர, 1,292 கி.மீ., ஒன்றிய சாலைகளும், 1,694 கி.மீ., துாரம் ஊராட்சி சாலைகள் என, மொத்தம் 5,239 கி.மீ., துார சாலை பயன்பாட்டில் உள்ளன.

கடந்த 2021ல் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய உதவிக்கோட்டங்கள் உள்ளடக்கிய நெடுஞ்சாலை துறை அலுவலகம், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள பகுதியில் இயங்கி வருகிறது.

இதன் கட்டுப்பாட்டில், 1,122 கி.மீ., துார சாலைகள் பராமரிக்கப்படுகின்றன. இந்த அலுவலகம் வாயிலாக, தற்போது ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம், முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ், சாலை விரிவு மற்றும் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

அதன்படி, 2024 - 2025ம் நிதி ஆண்டிற்கு, ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 56.45 கோடி ரூபாய் செலவில், 55 கி.மீ., துாரத்திற்கு 25 சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'இச்சாலை பணிக்கு, சமீபத்தில் டெண்டர் விடப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவ மழை முடிந்த பின் பணிகள் துவக்கப்படும். இதன் வாயிலாக, கிராமங்களில் தரமான சாலைகள் மற்றும் வாகன நெரிசல் இன்றி போக்குவரத்திற்கு வழிவகை செய்யப்படும்' என, நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 55 கி.மீ.,க்கு சாலை அமைக்கும் பணிக்கு, 56.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிதியை, காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய நெடுஞ்சாலை துறை உதவி கோட்டங்களுக்கு ஏற்ப, பணிகள், நிதி ஆகியவை பிரித்தளிக்கப்பட்டு உள்ளன.

இந்த சாலை அமைக்கும் பணிகளுக்கு, கடந்த மாதம் டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது. மழைக்கு பின் சாலை அமைக்கும் பணிகள் துவங்க உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

காஞ்சியில் புதிதாக அமைக்கப்பட உள்ள சாலைகள் விபரம்

உதவிக்கோட்டங்கள் சாலை எண்ணிக்கை துாரம் (கி.மீ.,) நிதி ஒதுக்கீடு (கோடியில்)

காஞ்சிபுரம் 10 32.05 11.70

உத்திரமேரூர் 6 8.80 16.20

ஸ்ரீபெரும்புதுார் 9 14.20 28.55

மொத்தம் 25 55.05 56.45






      Dinamalar
      Follow us