/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேலை வாய்ப்பு முகாமில் 584 பேருக்கு பணி உத்தரவு
/
வேலை வாய்ப்பு முகாமில் 584 பேருக்கு பணி உத்தரவு
ADDED : ஜூலை 26, 2025 09:49 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட தனியார் வேலைவாய்ப்பு முகாமில், 2,112 பேர் பங்கேற்றனர். இதில், 584 பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாயில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்துடன் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் இணைந்து நேற்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 20,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான நேர்காணல் நடத்தியது.
இம்முகாமில், கைத்தறி துறை அமைச்சர் காந்தி பங்கேற்று, வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவுகளை வழங்கினார்.
இம்முகாமில் 128 தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்றன. வேலையில்லா இளைஞர்களில், 1,309 ஆண்களும், 803 பெண்களும் என, மொத்தம் 2,112 பேர் பங்கேற்றனர்.
இதில், 362 ஆண்கள், 222 பெண்கள் என 584 நபர்கள், பல்வேறு தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ளனர்.
மேலும், 310 ஆண்கள் மற்றம் 98 பெண்கள் என, மொத்தம் 408 பேர் முதல் சுற்றில் தேர்வாகி, இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.