/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கூலி தொழிலாளியை வெட்டிய 6 பேர் கைது
/
கூலி தொழிலாளியை வெட்டிய 6 பேர் கைது
ADDED : பிப் 22, 2024 11:37 PM
செங்குன்றம், வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட முன் விரோதத்தால், தொழிலாளியை சரமாரியாக வெட்டிய, ஆறு பேர் கைதாகினர்.
சென்னை மூலக்கடை, பெரியார் நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் பிரேம் சுந்தர், 34; தனியார் தொழிற்சாலையில் பாரம் துாக்கும் தொழிலாளி.
இவருக்கும், உடன் பணிபுரியும் வடகரை கிராமத்தைச் சேர்ந்த அப்பன்ராஜுவுக்கும், வேலையில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 20ம் தேதி இரவு, பிரேம் சுந்தர் வேலை முடிந்து வெளியே சென்ற போது, அப்பன்ராஜ் உட்பட, 6 பேர் அவரை வழிமறித்து, கத்தியால் சரமாரியாக வெட்டினர்.
பலத்த காயமடைந்த பிரேம் சுந்தர் மயங்கி விழுந்தார். அங்கிருந்தோர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது, உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து, செங்குன்றம் போலீசார் விசாரித்தனர்.
இதையடுத்து, சம்பவத்தில் தொடர்புள்ள வடகரையைச் சேர்ந்த பழைய குற்றவாளிகளான அப்பன்ராஜ், 39, புழல் காவாங்கரை ரவீந்திரன், 29, வடகரை மகேஷ், 38, கிராண்ட்லைன் ஜோசப், 38, செய்யாறு கோகுல்ராஜ், 21, வசந்த், 23, ஆகியோரை, நேற்று அதிகாலை கைது செய்தனர்.