/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மொபைல் டவர் சாதனங்கள் திருட்டு விவகாரம் வட மாநிலத்தவர்கள் உட்பட 6 பேர் கைது
/
மொபைல் டவர் சாதனங்கள் திருட்டு விவகாரம் வட மாநிலத்தவர்கள் உட்பட 6 பேர் கைது
மொபைல் டவர் சாதனங்கள் திருட்டு விவகாரம் வட மாநிலத்தவர்கள் உட்பட 6 பேர் கைது
மொபைல் டவர் சாதனங்கள் திருட்டு விவகாரம் வட மாநிலத்தவர்கள் உட்பட 6 பேர் கைது
ADDED : அக் 23, 2024 08:56 PM
காஞ்சிபுரம்:தமிழகத்தின் போலீஸ் வடக்கு மண்டலத்தில் உள்ள, 10 மாவட்டங்களில், தொலை தொடர்பு நிறுவனங்கள் அமைத்துள்ள மொபைல் டவர்களில் பொருத்தியிருந்த முக்கிய தொலைதொடர்பு சாதனங்கள் திருடு போவது தொடர் கதையாக இருந்து வந்தது.
இதனால், தகவல் தொடர்பு அடிக்கடி பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக, வடக்கு மாவட்டங்களில் மட்டும், 2022 முதல், தற்போது வரை, 185 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உதவியுடன், வட மாநில கொள்ளை கும்பல், குழுவாக இணைந்து தொலைதொடர்பு சாதனங்கள் திருடுவது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனால், 30 பேர் கொண்ட போலீஸ் குழு அமைக்கப்பட்டது.
உத்தரபிரதேசம், புதுதில்லி, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். வடக்கு மாவட்டங்களில் உள்ள போலீஸ் எஸ்.பி.,தலைமையில், அந்தந்த மாவட்டங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு தனிப்படைகள் சென்றன.
அவ்வாறு, காஞ்சிபுரம் எஸ்.பி.,சண்முகம் தலைமையில் இரு தனிப்படையினர் உத்தரபிரதேசம் சென்று தேடி வந்தனர். இவ்வழக்கில், முக்கிய குற்றவாளிர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், புதிதாக 29 பேர் கைது செய்யப்பட்டள்ளனர்.
இதில், காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படையினர், உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஜமீல்அகமது,40; ஷகீல்கான்,35 ஆகிய இருவர் உட்பட, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிதுரை,38, காஞ்சிபுரம் மாவட்டம் சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த திருமலை,40, ராணிப்பேட்டையை சேர்ந்த ஜாபர்கான்,29, வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன்,50. ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர்.

