/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி அருகே கஞ்சா விற்ற 6 பேர் கைது
/
பள்ளி அருகே கஞ்சா விற்ற 6 பேர் கைது
ADDED : அக் 04, 2024 07:50 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்து மாத்துாரில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், அரசு பள்ளி அருகே, மாணவர்களை குறிவைத்து, கஞ்சா விற்பனை செய்து வருவதாக ஒரகடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் படி, ஒரகடம் போலீசார் நேற்று முன்தினம் பள்ளி அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளிக்கு அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வடமாநில இளைஞர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து, அவர் கையில் வைத்திருந்த பையை சோதித்து பார்த்தில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தன.
இதையடுத்து, அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், அதே பகுதியில் வாடகைக்கு தங்கி, நண்பர்களுடன் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு 5 கிராம் பொட்டலங்களை் 300 ரூபாய் வரை விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
இதையடுத்து, அவர்களிடருந்து 20,000 ரூபாய் மதிப்புள்ள அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, பள்ளி அருகே மாணவர்களிடம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த 20 - 34 வயதுடைய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.