/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சென்னையில் ஓட துவங்கின 66 புது தாழ்தள பஸ்கள்
/
சென்னையில் ஓட துவங்கின 66 புது தாழ்தள பஸ்கள்
ADDED : செப் 28, 2024 05:06 AM
சென்ன : சென்னையில், குறுகிய சாலைகளில் பயணிக்க முடியாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஆறு ஆண்டுகளுக்குமுன், தாழ்தள பேருந்து களின் சேவை நிறுத்தப்பட்டது. இதனால், மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, அவர்களது நலன் கருதி, மீண்டும் தாழ்தள பேருந்துகள் இயக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்தது.நீதிமன்றமும் மீண்டும் தாழ்தள பேருந்துகளை இயக்க உத்தரவிட்டது.
இதையடுத்து, 611 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. முதற்கட்டமாக 58 பேருந்துகளின் சேவை கடந்த மாதம் துவக்கப்பட்டது.
மேலும், மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி, இறங்குவதற்கு சாய்தள வசதி என, பல்வேறுசிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இரண்டாவது கட்டமாக 11 வழித்தடங்களில்,66 புதிய தாழ்தள பேருந்துகள், நேற்று பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
எந்தெந்த தடங்களுக்கு ஒதுக்கீடு
வழித்தடம் தாழ்தள பஸ்களின் எண்ணிக்கை
அம்பத்துார் எஸ்டேட் - வேளச்சேரி 5
தாம்பரம் - செங்குன்றம் 5
சுங்கச்சாவடி - திருவான்மியூர் 8
திருவொற்றியூர் - பூந்தமல்லி 2
கோயம்பேடு - கிளாம்பாக்கம் 9
கோயம்பேடு - அண்ணா சதுக்கம் 5
தாம்பரம் - ஸ்ரீபெரும்புதுார் 5
தாம்பரம் - மாமல்லபுரம் 5
வடபழனி - கூடுவாஞ்சேரி 6
கிளாம்பாக்கம் - பிராட்வே 10
பிராட்வே - கிளாம்பாக்கம் 6