/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பரந்துார் ஏர்போர்ட் தாசில்தார்கள் 7 பேர் பணியிட மாற்றம்
/
பரந்துார் ஏர்போர்ட் தாசில்தார்கள் 7 பேர் பணியிட மாற்றம்
பரந்துார் ஏர்போர்ட் தாசில்தார்கள் 7 பேர் பணியிட மாற்றம்
பரந்துார் ஏர்போர்ட் தாசில்தார்கள் 7 பேர் பணியிட மாற்றம்
ADDED : செப் 30, 2025 11:48 PM
காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் மாவட்டத்தில், பரந்துார் ஏர்போர்ட் திட்டத்தில், நில எடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த ஆறு தாசில்தார்கள் உட்பட ஏழு பேரை பணியிட மாற்றம் செய்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வருவாய் துறையின் கீழ் பணியாற்றும் தாசில்தார்கள் உள்ளிட்ட அதிகாரிகள், நிர்வாக காரணமாக பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், நில எடுப்பு சம்பந்தமாக சிப்காட் மற்றும் பரந்துார் ஏர்போர்ட் நில எடுப்பு திட்டம் ஆகிய அலுவலகங்களில் பணியாற்றி வந்த ஏழு தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.