/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கொள்முதல் நிலையத்தில் 7,000 நெல் மூட்டைகள் தேக்கம்
/
கொள்முதல் நிலையத்தில் 7,000 நெல் மூட்டைகள் தேக்கம்
கொள்முதல் நிலையத்தில் 7,000 நெல் மூட்டைகள் தேக்கம்
கொள்முதல் நிலையத்தில் 7,000 நெல் மூட்டைகள் தேக்கம்
ADDED : அக் 11, 2025 12:13 AM

திருமுக்கூடல்:திருமுக்கூடல் நெல் கொள்முதல் நிலையத்திற்கு லாரிகள் வராததால், 7,000 நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் கிணறு மற்றும் பாலாற்று பாசனம் வாயிலாக, 200 ஏக்கர் பரப்பிலான நிலங்களில் விவசாயிகள் நெல் பயிரிட்டனர்.
மேலும், அப்பகுதியை சுற்றி உள்ள புல்லம்பாக்கம், மதுார், சித்தாலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், பல ஏக்கர் நிலப் பரப்பில் நெல் பயிரிட்டுள்ளனர்.
தற்போது அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள், திருமுக்கூடல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்கின்றனர்.
கொள்முதல் செய்த நெல்லை, நுகர் பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு மற்றும் அரிசி ஆலைகளுக்கு ஏற்றிச் செல்ல, ஒரு வாரமாக லாரிகள் வரவில்லை என, கூறப்படுகிறது.
இதனால், 90 கிலோ கொண்ட, 7,000 நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் தேக்கம் அடைந்துள்ளன.
திடீர் மழையால் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் நனைந்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
எனவே, கொள்முதல் நிலையத்தில் தேக்கமான நெல் மூட்டைகளை உடனடியாக நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு ஏற்றிச் செல்ல, சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.