/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாதில் நடவு செய்த 7,000 மரக்கன்றுகள் செழுமை
/
வாலாஜாபாதில் நடவு செய்த 7,000 மரக்கன்றுகள் செழுமை
ADDED : ஜூலை 09, 2025 01:36 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் - வண்டலுார் சாலையோரங்களில் நடவு செய்த 7,000 மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து உள்ளன.
வாலாஜாபாத் - வண்டலுார் வரையிலான 49 கி.மீ., துாரம் கொண்ட சாலை குறுகியதாக இருந்ததால், வாகன நெரிசல் அதிகரித்து அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வந்தது.
இப்பிரச்னைக்கு தீர்வாக, தமிழ்நாடு உள் கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பில், 175 கோடி ரூபாய் செலவில் இச்சாலை ஆறுவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
சாலை விரிவாக்கப் பணியின் போது, 700 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அகற்றம் செய்த மரக் கன்றுகளுக்கு மாறாக, பசுமை ஏற்படுத்துதல் மற்றும் காற்று மாசு தடுக்கும் பொருட்டு, 10 மடங்கு எண்ணிக்கையிலான, 7,000 மரக்கன்றுகள் நடவு செய்ய, தமிழ்நாடு சாலை உள் கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, வாலாஜாபாத் - வண்டலுார் நெடுஞ்சாலை ஓரத்தில், 2022ல், புங்கன், பூவரசு, வில்வம், நாவல் உள்ளிட்ட வகையிலான, 7,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
அந்த மரக்கன்றுகள் தற்போது நன்கு செழுமையாக வளர்ந்துள்ளன.