/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரத்தில் 10 நாட்களாக மழை முழு கொள்ளளவை எட்டிய 72 ஏரிகள்
/
காஞ்சிபுரத்தில் 10 நாட்களாக மழை முழு கொள்ளளவை எட்டிய 72 ஏரிகள்
காஞ்சிபுரத்தில் 10 நாட்களாக மழை முழு கொள்ளளவை எட்டிய 72 ஏரிகள்
காஞ்சிபுரத்தில் 10 நாட்களாக மழை முழு கொள்ளளவை எட்டிய 72 ஏரிகள்
ADDED : அக் 27, 2025 11:41 PM

காஞ்சிபுரம்: காஞ்சியில் ௧௦ நாட்களாக மழை தொடர்வதால், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 381 ஏரிகளில், 72 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில், 381 ஏரிகள் உள்ளன. அதேபோல, ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் 378 ஏரிகள் உள்ளன.
இந்த ஏரிகள், வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக வறண்டு இருந்தன. கடந்த 10 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, ஏரிகள் மெல்ல நிரம்பின.
செய்யாறு, பாலாறு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், ஆறு அருகில் உள்ள ஏரிகள் நிரம்பி காணப்படுகின்றன. ஏரிகள் நிரம்புவதால், நவரை பருவத்திற்கு கைகொடுக்கும் என, விவசாயிகள் நம்புகின்றனர்.
கடந்த 10 நாட்களில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில், 72 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மேலும், 56 ஏரிகள் 75 சதவீதமும், 136 ஏரிகள் 50 சதவீதமும், 114 ஏரிகள் 25 சதவீதமும், 3 ஏரிகள் 25 சதவீத்திற்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன.
அதேபோல, ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள 378 ஏரிகளில், உத்திரமேரூர் ஒன்றியத்தில் இரண்டு ஏரிகளும், குன்றத்துார் ஒன்றியத்தில் இரண்டு ஏரிகளும், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் ஒரு ஏரி என, ஐந்து ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பி உள்ளன.

