/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
7ம் நுாற்றாண்டு முருகர் சிலை காஞ்சி அருகே கண்டெடுப்பு
/
7ம் நுாற்றாண்டு முருகர் சிலை காஞ்சி அருகே கண்டெடுப்பு
7ம் நுாற்றாண்டு முருகர் சிலை காஞ்சி அருகே கண்டெடுப்பு
7ம் நுாற்றாண்டு முருகர் சிலை காஞ்சி அருகே கண்டெடுப்பு
ADDED : அக் 10, 2024 01:05 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஒழுக்கோல்பட்டு கிராமத்தில், வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய குழுவினர் ஆய்வு செய்தனர். இதில், 7வது நுாற்றுாண்டைச் சேர்ந்த முருகர் சிலை நேற்று கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து, வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய தலைவர் அஜய்குமார் கூறியதாவது:
ஒழுக்கோல்பட்டு கிராமத்தில், லட்சுமியம்மன் கோவில் அருகே, பழமை வாய்ந்த சிலை சேதமடைந்த நிலையில் உள்ளது. இச்சிலை, நின்ற நிலையில், தலை கூம்பு வடிவில் உள்ளது. கரந்த மகுட கவசம் மற்றும் முகம், காது ஆகிய பகுதிகளில், ஆபரணங்கள் அணியப்பட்டு உள்ளன.
இடுப்பில் வேட்டியும், வலது கையில் வாள் ஆகிய ஆயுதங்கள் உள்ளன. இந்த சிலையில் சேதம் ஏற்பட்டிருப்பதால், அடையாளங்கள் முழுதும் சிதைக்கப்பட்டு உள்ளது.
இது, ஏழாம் நுாற்றாண்டின் முருகர் சிலை என, வரலாற்று மத்திய தொல்லியல் துறை உதவி ஆய்வாளர் ரமேஷ், கல்வெட்டு ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் உறுதிபடுத்தி உள்ளனர்.
இந்த சிலை, போதிய பாதுகாப்பு இல்லாததால், சிலையின் வடிவமே மாறி உள்ளது. அப்பகுதியினர், முருகர் வழிபாட்டிற்கு பதிலாக, அம்மனாக வழிபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே, ஒழுக்கோல்பட்டு ஊராட்சியில், வதியூர் துணை கிராமத்தில், இடைக்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. மேலும், அபூர்வமான முருகர் சிலை கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதை, சம்பந்தப்பட்ட துறையினர் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.