/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பேருந்து பயணியரிடம் ரூ.8,000 கைவரிசை
/
பேருந்து பயணியரிடம் ரூ.8,000 கைவரிசை
ADDED : மார் 19, 2024 03:50 AM
மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே பூதுார் கிராமம், பெரிய தெருவை சேர்ந்தவர் மலர், 45. இவர், நேற்று செங்கல்பட்டில் உள்ள தனியார் நகை அடகு கடையில், அவரின் நகையை அடகு வைத்து, 5,000 ரூபாய் பணம் பெற்றுள்ளார்.
பின், தனியார் பேருந்து வாயிலாக, செங்கல்பட்டில் இருந்து மதுராந்தகம் வந்து, மதுராந்தகத்தில் பேருந்தில் இருந்து இறங்கி, கட்டைப் பையை பார்த்தபோது, 5,000 ரூபாய் வைத்திருந்த பர்ஸ் திருடு போனது தெரிந்தது.
இதே போல், கே.கே., புதுார் பகுதியைச் சேர்ந்தவர் மேரி, 55. மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில், மரத்து நிழலில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார்.
அப்போது, அவரின் கைப்பையை பிளேடால் கிழித்து, அதிலிருந்த 3,000 ரூபாய் மற்றும் ஏ.டி.எம்., கார்டை, மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

