/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி, ஸ்ரீபெரும்புதுார் தொகுதிகளில் 82 வளர்ச்சி பணிகள் நிலுவை நிதியாண்டு முடிந்தும் அதிகாரிகள் திணறல்
/
காஞ்சி, ஸ்ரீபெரும்புதுார் தொகுதிகளில் 82 வளர்ச்சி பணிகள் நிலுவை நிதியாண்டு முடிந்தும் அதிகாரிகள் திணறல்
காஞ்சி, ஸ்ரீபெரும்புதுார் தொகுதிகளில் 82 வளர்ச்சி பணிகள் நிலுவை நிதியாண்டு முடிந்தும் அதிகாரிகள் திணறல்
காஞ்சி, ஸ்ரீபெரும்புதுார் தொகுதிகளில் 82 வளர்ச்சி பணிகள் நிலுவை நிதியாண்டு முடிந்தும் அதிகாரிகள் திணறல்
ADDED : ஜன 16, 2025 07:21 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - தனி தொகுதியில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் என, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
ஸ்ரீபெரும்புதுார் பொது தொகுதியில், ஸ்ரீபெரும்புதுார், ஆலந்துார், பல்லாவரம், தாம்பரம், மதுரவாயல், அம்பத்துார் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும், ஆண்டுதோறும் தலா 5 கோடி ரூபாய், மத்திய அரசு தொகுதி மேம்பாட்டு நிதியாக ஒதுக்கீடு செய்கிறது.
லோக்சபா உறுப்பினர்களும், தங்களின் தொகுதியின் வளர்ச்சிக்கு, சட்டசபை தொகுதிக்கு ஏற்ப நிதியை பிரித்தளிக்கின்றனர்.
இந்த நிதியை, அந்தந்த மாவட்ட ஊரக வளர்ச்சி துறையினர், சம்பந்தப்பபட்ட கலெக்டர்களிடம் ஒப்புதல் பெற்று, பணிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில், இரு நிதி ஆண்டுகளுக்கு, 289 பணிகள் செய்வதற்கு, 9.79 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதில், 263 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 26 பணிகள் நிலுவையில் உள்ளன.
அதேபோல், ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலு, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில், இரு ஆண்டுகளுக்கு, 112 பணிகள் செய்வதற்கு, 9.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். இதில், 56 பணிகள் மட்டுமே நிறைவு செய்யப்பட்டு உள்ளன. மீதம், 56 பணிகள் நிலுவையில் உள்ளன.
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இரு லோக்சபா தொகுதிகளிலும், இரு நிதி ஆண்டிலும், 401 பணிகள் தேர்வு செய்யப்பட்டன. இதில், 82 பணிகள் நிலுவையில் உள்ளன.
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், ஒதுக்கீடு செய்த பணிகளுக்கு, 91 சதவீத பணிகளும். ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், 50 சதவீத பணிகளும் மட்டுமே நிறைவேற்றப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு நிதி ஆண்டிற்கும் ஒதுக்கப்படும் பணிகளுக்கு, நிதி ஆண்டு மார்ச் மாதம் முடியும் போது, அனைத்து பணிகளும் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவு பெற்றும், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இரு லோக்சபா தொகுதிகளிலும், வளர்ச்சி பணிகள் நிறைவு பெறவில்லை.
இரு லோக்சபா தொகுதிகளிலும், முன்பு இருந்த எம்.பி.,க்களே மீண்டும் தொடர்வதால், பணிகளை செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்படுகிறது என, அரசியல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛எம்.பி.,க்கள் பரிந்துரை செய்யப்படும் பணிகளுக்கு, அந்தந்த கலெக்டரின் ஒப்புதல் பெற்று பணிகள் செய்ய அனுமதி அளிக்கிறோம். நிலுவை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.