தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 69 மையங்களில் துவங்கிய 10ம் வகுப்பு தேர்வு மொழித்தேர்வில் 85 மாணவர்கள் 'ஆப்சென்ட்'

 69 மையங்களில் துவங்கிய 10ம் வகுப்பு தேர்வு மொழித்தேர்வில் 85 மாணவர்கள் 'ஆப்சென்ட்'

 69 மையங்களில் துவங்கிய 10ம் வகுப்பு தேர்வு மொழித்தேர்வில் 85 மாணவர்கள் 'ஆப்சென்ட்'


ADDED : மார் 12, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 05:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், ௧௦ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. மொழித்தேர்வில் 85 மாணவ - மாணவியர் ஆப்சென்ட் ஆகினர்.

தமிழகம் முழுதும், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 2ம் தேதி துவங்கி தொடர்ந்து நடக்கின்றன. அதைத் தொடர்ந்து, நேற்று, ௧௦ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கி, ஏப்ரல் 6ம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்வுத்துறை மேற்கொள்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், தனியார் மற்றும் அரசு பள்ளிகள் என, 124 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் தேர்வெழுதினர்.

பத்தாம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு, மொத்தம், 69 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 7,592 மாணவர்களும், 7,767 மாணவியரும் என, மொத்தம் 15,359 பேர் அரசு பொதுத்தேர்வுகள் எழுத ஹால் டிக்கெட் வழங்கப்பட்டன.

முதல் நாளான நேற்று, மொழித்தேர்வு நடந்தது. இதில், 85 மாணவ - மாணவியர் நேற்று ஆப்சென்ட் ஆகினர். காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா, அய்யம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தேர்வு அறைகளில் ஆய்வுநடத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us