ADDED : மார் 07, 2024 12:27 AM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தண்டபாணி ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 55வது ஜெயந்தி விழா சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச அய்யர் தலைமையில் நடந்தது.
ஆதம்பாக்கம் ஆர்.கண்ணன் பாகவதர், குருவார வழிபாட்டு மன்ற செயலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் ஆர்.வெங்கட சுப்பிரமணியன் வரவேற்றார்.
விழாவில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 86 மாணவர்களுக்கு சங்கரமடத்தின் மேலாளர் ந.சுந்தரேச அய்யர், காமாட்சி அம்மன் உருவ வெள்ளிக்காசு, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியை தெய்வகுமாரி நன்றி கூறினார்.
