/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கஞ்சா, குட்கா விற்ற 9 பேருக்கு 'காப்பு'
/
கஞ்சா, குட்கா விற்ற 9 பேருக்கு 'காப்பு'
ADDED : டிச 10, 2024 07:18 AM
சென்னை வெட்டுவாங்கேணியைச் சேர்ந்தவர் நிர்மல்குமார், 24. இவர், கடந்த 3ம் தேதி ஒடிசா மாநிலம் பேராம்பூர் பகுதியில் இருந்து, 4 கிலோ கஞ்சா விற்பனைக்கு வாங்கி வந்துள்ளார்.
இதை, சென்னைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது குறித்து, உத்திரமேரூர் மதுபானக்கடை அருகே தன் நண்பர்களான களியாநகர் தரணி, 23, மொரப்பாக்கம் விக்னேஷ், 23, கானத்துார் சின்ராசு, 24, ஈஞ்சம்பாக்கம் ராகுல், 28, ஆகியோருடன், நேற்று முன்தினம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, தகவல் அறிந்து வந்த உத்திரமேரூர் போலீசார், ஐந்து பேரையும் கைது செய்து, 4 கிலோ கஞ்சா, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீபெரும்புதுார்
ஒரகடம் மேம்பாலம் அருகே உள்ள பெட்டி கடையில், ஒரகடம் போலீசார் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர். கடையில், குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, 2,000 ரூபாய் மதிப்புள்ள, 1 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் சென்னக்குப்பத்தைச் சேர்ந்த வாசுகி, 53, என்பவரை கைது செய்தனர்.
அதேபோல், ஒரகடம் மேம்பாலத்தின் கீழ் உள்ள பெட்டி கடையில் குட்கா விற்ற ராஜாங்கம், 45, பழயசீவரம் கிராமத்தில் குட்கா விற்ற காந்திமதி, 53, ஆகியோரை கைது செய்து, 1.5 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
வாலாஜாபாத்
வாலாஜாபாத் ஒன்றியம், புத்தாகரத்தை சேர்ந்தவர் குணவதி, 68. இவர், அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இக்கடையில், வாலாஜாபாத் போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, குணவதியை வாலாஜாபாத் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-- நமது நிருபர் -