/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாறு பாலத்தில் பழுதாகி நின்ற லாரி ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல்
/
பாலாறு பாலத்தில் பழுதாகி நின்ற லாரி ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல்
பாலாறு பாலத்தில் பழுதாகி நின்ற லாரி ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல்
பாலாறு பாலத்தில் பழுதாகி நின்ற லாரி ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூலை 20, 2025 12:44 AM

காஞ்சிபுரம்,:செவிலிமேடு பாலாறு பாலத்தில், பழுதாகி நின்ற லாரியால், காஞ்சிபும் - வந்தவாசி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், செவிலிமேடிற்கும், புஞ்சையரசந்தாங்கல் கிராமத்திற்கும் இடையே பாலாறு உள்ளது.
இதன் குறுக்கே 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ள பாலம் வழியாக பெருநகர், மானாம்பதி, உத்திரமேரூர், வந்தவாசி, செய்யாறு, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிக்கு, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இப்பாலத்தின் மீது போடப்பட்டுள்ள சாலையின் இணைப்பு பகுதி, சேதமடைந்து ஆங்காங்கே ஓட்டை ஏற்பட்டுள்ளது.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று, மதியம் 1:00 மணியளவில், புஞ்சையரசந்தாங்கல் வழியாக காஞ்சிபுரம் நோக்கி வந்த லாரி ஒன்று, பாலாறு பாலத்தில் திடீரென பழுதடைந்து நின்றது.
இதனால், வந்தவாசி சாலையில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி வந்த வாகனங்கள் புஞ்சையரசந்தாங்கல் கூட்ரோடு வரை அணிவகுத்து நின்றன.
தகவல் அறிந்து வந்த காஞ்சி தாலுகா போலீசார் போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர். பின், மெக்கானிக் வரவழைக்கப்பட்டு, பழுது நீக்கம் செய்யப்பட்ட பின் லாரி அங்கிருந்து சென்றது.
இதனால், வந்தவாசி சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.