/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காக்கநல்லுாரில் குழாய் உடைந்து வீணாக வெளியேறும் குடிநீர்
/
காக்கநல்லுாரில் குழாய் உடைந்து வீணாக வெளியேறும் குடிநீர்
காக்கநல்லுாரில் குழாய் உடைந்து வீணாக வெளியேறும் குடிநீர்
காக்கநல்லுாரில் குழாய் உடைந்து வீணாக வெளியேறும் குடிநீர்
ADDED : நவ 09, 2025 03:03 AM

உத்திரமேரூர்: காக்கநல்லுாரில் உ டைந்த குடிநீர் குழாயை சீரமைக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் பேரூராட்சி, முதல் வார்டுக்கு உட்பட்டது காக்கநல்லுார் துணை கிராமம். இக்கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
ஆணைப்பள்ளம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து, பூமியில் புதைக்கப்பட்ட குழாய்கள் வாயிலாக இங்குள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதை தொடர்ந்து, காக்கநல்லூரில் ஒவ்வொரு தெருக்களிலும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆங்காங்கே குழாய் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், முருக்கேரி செல்லும் சாலையோரத்தில் உள்ள குழாய் ஒன்று உடைந்து, குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. குழாய் உடைந்து, 10 நாட்களாகியும் குழாய் உடைப்பை சரி செய்ய, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
இதனால், சாலையிலே வழிந்தோடும் குடிநீரால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, காக்கநல்லூரில் உடைந்த குழாயை சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

