/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பலாத்காரம் செய்து சிறுவன் படுகொலை காஞ்சியில் கொடூர சர்வே ஆய்வாளர் கைது
/
பலாத்காரம் செய்து சிறுவன் படுகொலை காஞ்சியில் கொடூர சர்வே ஆய்வாளர் கைது
பலாத்காரம் செய்து சிறுவன் படுகொலை காஞ்சியில் கொடூர சர்வே ஆய்வாளர் கைது
பலாத்காரம் செய்து சிறுவன் படுகொலை காஞ்சியில் கொடூர சர்வே ஆய்வாளர் கைது
ADDED : அக் 02, 2024 01:28 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள தணிகைவேல் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ், 34. காஞ்சிபுரம் சர்வே துறையில், ஆய்வாளராக பணியாற்றுகிறார். ஏற்கனவே திருமணமான இவர், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் அருகே டிபன் கடைக்கு சாப்பிட சென்ற ராஜேஷுக்கு, அங்கு கணவரை பிரிந்து வாழும், 30 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு ஆண், பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். நெருங்கி பழகியதால், தன் குழந்தைகளுடன் பழகவும், அவர்களை வீட்டிற்கு அழைத்து செல்லவும் ராஜேஷை அந்த பெண் அனுமதித்துள்ளார்.
கடந்த செப்., 28ம் தேதி, மதியம் இரு குழந்தைகளையும் தன் வீட்டிற்கு அழைத்து சென்ற ராஜேஷ், அவர்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
இதில், உடன்பட மறுத்த 5 வயது சிறுவனை அடித்தில், மயக்கமடைந்துள்ளான். மயங்கிய நிலையில் சிறுவனையும், இன்னொரு குழந்தையையும், பெண்ணின் வீட்டில் ராஜேஷ் விட்டு சென்றார்.
மயங்கிய நிலையில் இருந்த சிறுவனை, துாங்குவதாக கருதி, அந்த பெண் விட்டுவிட்டார். மறுநாள், 29ம் தேதி காலையிலும் சிறுவன் எழுந்திருக்காமல் மயங்கி கிடந்தான். உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவர் பரிசோதனை செய்ததில், சிறுவன் ஏற்கனவே இறந்ததுவிட்டதாக தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெண், சிறுவனின் அக்கா 9 வயது சிறுமியிடம் விசாரித்துள்ளார்.
அப்போது, தன்னிடமும், தம்பியிடமும் ராஜேஷ், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதை கூறிய சிறுமி, ராஜேஷ் அடித்ததால் தான் சிறுவன் மயங்கியதையும் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, காஞ்சி தாலுகா போலீசில், பெண்ணின் கணவர் புகார் அளித்தார். அவரது புகாரின்படி, சர்வேயர் ராஜேஷை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
போலீசார் விசாரணையில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டபோது, சிறுவனை அடித்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, கொலை, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி, அவரை புழல் சிறையில் அடைத்தனர்.