/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பணிகள் நிறைவு பெறாமலேயே திறக்கப்பட்ட நிழற்கூரை
/
பணிகள் நிறைவு பெறாமலேயே திறக்கப்பட்ட நிழற்கூரை
ADDED : பிப் 13, 2024 04:04 AM

காஞ்சிபுரம் : ஏனாத்துார் - தென்னேரி சாலையில், ஒழையூர் மோட்டூர் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, 4 லட்சம் ரூபாய் செலவில் புதிய நிழற்கூரை கட்டடம் கட்டி உள்ளனர்.
இந்த நிழற்கூரை கட்டடத்தின் கட்டுமான பணிகள் நிறைவு பெறுவதற்கு முன்பே, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் மற்றும் காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் ஆகியோர், பிப்.,3ம் தேதி திறந்து வைத்தனர்.
நிழற்கூரை மேல் பகுதி மற்றும் பெயின்ட் அடிக்கும் பணியால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் நிழற்கூரை கட்டடத்தில் ஒதுங்க முடியவில்லை.
மேலும், கட்டுமானப் பொருட்கள் குவியலாக நிழற்கூரை கட்டடத்தின் ஓரத்தில் கொட்டப்பட்டு இருப்பதால், நிழற்கூரை கட்டடத்திற்கு வருவோருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
எனவே, நிழற்கூரை கட்டடத்தின் பணிகள் நிறைவு செய்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.