/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நீர்நிலையில் ஊராட்சி கட்டடம் கண்டு கொள்ளாத கலெக்டர்
/
நீர்நிலையில் ஊராட்சி கட்டடம் கண்டு கொள்ளாத கலெக்டர்
நீர்நிலையில் ஊராட்சி கட்டடம் கண்டு கொள்ளாத கலெக்டர்
நீர்நிலையில் ஊராட்சி கட்டடம் கண்டு கொள்ளாத கலெக்டர்
ADDED : நவ 11, 2024 02:55 AM

மதுரமங்கலம்:மதுரமங்கலம் அடுத்த, சிவபுரம் ஊராட்சியில், குருத்தவிநாயகர் கோவில் உள்ளது. அதே வளாகத்தில், முருகன், அய்யப்பன், வள்ளலார் ஆகிய கோவில்கள் உள்ளன.
இக்குளக்கரை மீது, சிவபுரம் ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. பொதுவாக, நீர்நிலை பகுதிகளில், அரசு மற்றும் பிற கட்டடங்கள் கட்டக்கூடாது என, அரசு வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், ஊராட்சி நிர்வாகம் யாருடைய கருத்திற்கும் செவி சாய்க்காமல், ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதை தடுக்க வேண்டும் என, அதே கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்விக்கு புகார் மனு அளித்துள்ளார்.
எனினும், ஊராட்சி அலுவலக கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.