ADDED : ஜன 17, 2024 10:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி முதல் மார்ச் வரை, கடல் ஆமைகள் கரைக்கு வந்து, மணலில் குழிதோண்டி முட்டையிட்டு, மூடி வைத்து செல்லும். இதற்காக, பெசன்ட் நகர், கோவளம் உள்ளிட்ட கடற்கரை பகுதியில், பாதுகாப்பு வளையம் அமைத்து, முட்டைகள் பாதுகாக்கப்படுகின்றன.
கடற்கரைக்கு வரும் ஆமைகள், கப்பல், படகில் அடிபட்டு காயமடையும். லேசான காயமடையும் ஆமைகள், கரைக்கு வந்து முட்டை போட்டு சென்றுவிடும்.
சில ஆமைகள் வரும் வழியில் இறந்துவிடும். அவை, சென்னை காசிமேடு முதல் கோவளம் இடையே இறந்த நிலையில் கரை ஒதுங்கி விடும். சமீபமாக ஆங்காங்கே பல ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. பனையூர் கடற்கரையில் ஒரு ஆமை இறந்து கரை ஒதுங்கியது.