/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மனித நேயப்பள்ளி கட்டடங்களின் எண்ணிக்கை சரிவு திட்டம் துவங்கிய வேகத்தில் முடங்கும் அபாயம்
/
மனித நேயப்பள்ளி கட்டடங்களின் எண்ணிக்கை சரிவு திட்டம் துவங்கிய வேகத்தில் முடங்கும் அபாயம்
மனித நேயப்பள்ளி கட்டடங்களின் எண்ணிக்கை சரிவு திட்டம் துவங்கிய வேகத்தில் முடங்கும் அபாயம்
மனித நேயப்பள்ளி கட்டடங்களின் எண்ணிக்கை சரிவு திட்டம் துவங்கிய வேகத்தில் முடங்கும் அபாயம்
ADDED : நவ 06, 2024 07:05 PM
காஞ்சிபுரம், நவ. 7-
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மனித நேயப் பள்ளி புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு எண்ணிக்கை சரிந்து வருகிறது. இதனால், திட்டம் துவங்கிய வேகத்தில் முடங்கும் அபாயம் உள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிதோறும், துவக்கம் மற்றும் நடுநிலை பள்ளிகள் இயங்கி வருகின்றன.
பெரும்பாலான பள்ளிகளில், கழிப்பறை, கூடுதல் வகுப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லை. இருப்பினும், ஒருங்கிணைந்த பள்ளி வளர்ச்சி கட்டமைப்பு திட்டத்தில், கழிப்பறை, கூடுதல் வகுப்பறை கட்டடம், தண்ணீர் தேக்க தொட்டி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை, அந்தந்த வட்டார வளர்ச்சி நிர்வாகங்கள் மேம்படுத்தி வருகிகிறது. எனினும், கூடுதல் கட்டடம் மற்றும் பிற வசதிகள் மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில், அரசு உள்ளது.
இதை கருத்தில் கொண்டு, 2022 - 23ம் நிதி ஆண்டு, 31.48 கோடி ரூபாய் செலவில், 96 குழந்தைகள் மனித நேய பள்ளிகள் கட்டி முடிக்கப்பட்டன.
அதேபோல, 2023 - 24ம் நிதி ஆண்டு, 5.43 கோடி ரூபாய் செலவில், 14 பள்ளிகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. நடப்பாண்டு, 1.31 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், நான்கு பள்ளிகள் கட்டப்பட உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும், பள்ளி கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படும் போது, குழந்தைகள் மனித நோயப்பள்ளிகள் கட்டும் திட்டம் துவக்கிய வேகத்தில் முடங்கும் அபாயத்தில் உள்ளது.
இதனால், அரசு பள்ளி மாணவ - மாணவியரின் கூடுதல் வகுப்பறை, கழிப்பறை உள்ளிட்ட பல வித வசதிகளில், பின் தங்கும் சூழல் உருவாகி உள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஊராட்சிகளில் இருக்கும் பள்ளி சேத கட்டடங்கள் மற்றும் பயன்படுத்த முடியாத கட்டடங்களுக்கு பதிலாக, குழந்தைகள் மனித நேயப் பள்ளிகள் புதிய கட்டம் கட்டும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளன.
திட்டம் துவக்கத்தில், அதிக பள்ளிகளை தேர்வு செய்து, கட்டி முடித்து விட்டோம். அடுத்தடுத்த நிதி ஆண்டில் குறைந்த எண்ணிக்கை தேர்வு செய்ய வேண்டி உள்ளது, வேறு ஒன்றுமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.