/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுற்றவிட்ட 'கூகுள் மேப்'பால் சதுப்பு நிலத்தில் சிக்கிய டெலிவரி பாய்
/
சுற்றவிட்ட 'கூகுள் மேப்'பால் சதுப்பு நிலத்தில் சிக்கிய டெலிவரி பாய்
சுற்றவிட்ட 'கூகுள் மேப்'பால் சதுப்பு நிலத்தில் சிக்கிய டெலிவரி பாய்
சுற்றவிட்ட 'கூகுள் மேப்'பால் சதுப்பு நிலத்தில் சிக்கிய டெலிவரி பாய்
ADDED : அக் 19, 2024 12:33 AM

துரைப்பாக்கம், இரவு உணவு 'டெலிவரி' செய்ய,'கூகுள் மேப்' பார்த்தபடி,'பைக்'கில் சென்ற ஊழியர், சதுப்பு நில சேற்றில் சிக்கினார். தீயணைப்பு வீரர்கள் அவரை, போராடி மீட்டனர்.
சென்னை, சோழிங்கநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் பவுன்ராஜ், 25; தனியார் நிறுவனத்தில் உணவு 'டெலிவரி' செய்யும் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு துரைப்பாக்கம், வி.ஜி.பி., அவென்யூவில் உள்ள ஒரு வீட்டிற்கு, உணவு டெலிவரி செய்ய பைக்கில் சென்றார். 'ஆர்டர்' வந்த இடத்திற்குச் செல்ல, தன் மொபைல் போனில் 'கூகுல் மேப்' காட்டிய வழியில் சென்றுள்ளார்.
இருள் சூழ்ந்திருந்த பகுதியை 'மேப்' காட்டிய நிலையில், அந்த வழியில் சென்ற பவுன்ராஜ், திடீரென சதுப்பு நில சகதி பகுதியில் சிக்கிஉள்ளார்.
அதிலிருந்து மீள முடியாமல் தவித்த அவர், உதவிக்கு கூச்சலிட்டுள்ளார். யாரும் அங்கு இல்லாததால், மீண்டும் வெளியேற முயற்சித்துள்ளார். அவரின் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து சமயோஜிதமாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு உதவி கோரினார்.
சற்று நேரத்தில், பவுன்ராஜ் மொபைல் போனில், துரைப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் தொடர்பு கொண்டனர். அவர்களுக்கு, தான் சிக்கிய இடத்தில் இருந்து,'கரன்ட் லொக்கேஷன்' அனுப்பிஉள்ளார்.
அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், சேற்றில் சிக்கிய பவுன்ராஜை, 15 நிமிட போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்டனர்.
'கூகுள் மேப்'பால் ஆள் நடமாட்டம் இல்லாத இருள் சூழ்ந்த பகுதியில் வாலிபர் சிக்கிய சம்பவம், சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.