/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாதில் பாழாகி வரும் தாய்மார்கள் பாலுாட்டும் அறை
/
வாலாஜாபாதில் பாழாகி வரும் தாய்மார்கள் பாலுாட்டும் அறை
வாலாஜாபாதில் பாழாகி வரும் தாய்மார்கள் பாலுாட்டும் அறை
வாலாஜாபாதில் பாழாகி வரும் தாய்மார்கள் பாலுாட்டும் அறை
ADDED : டிச 20, 2024 01:05 AM

வாலாஜாபாத்:பேருந்து நிலையங்களில், கடந்த 2015ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்காக பாலுாட்டும் அறை தமிழகம் முழுதும் துவக்கப்பட்டது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய பேருந்து நிலையங்களில், தாய்மார்கள் பாலுாட்டும் அறை திறக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில், இத்திட்டத்திற்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டு, தாய்மார்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த பாலுாட்டும் அறை சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாமல் பழுதான நிலையில் காணப்படுகிறது. இந்த அறையின் கதவை திறந்தாலே துர்நாற்றம் வீசுவதுடன், இருள் சூழ்ந்த நிலையில் உள்ளது. சில நேரங்களில் சமூக விரோத செயல்களும் அரங்கேறி வருவதாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர்.
எனவே, வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலுாட்டும் அறையை முறையாக பராமரித்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.