/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விதி மீறிய 6,043 வாகனங்களுக்கு ஒரே ஆண்டில் ரூ.1.29 கோடி அபராதம்
/
விதி மீறிய 6,043 வாகனங்களுக்கு ஒரே ஆண்டில் ரூ.1.29 கோடி அபராதம்
விதி மீறிய 6,043 வாகனங்களுக்கு ஒரே ஆண்டில் ரூ.1.29 கோடி அபராதம்
விதி மீறிய 6,043 வாகனங்களுக்கு ஒரே ஆண்டில் ரூ.1.29 கோடி அபராதம்
ADDED : பிப் 15, 2024 02:36 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகர்ப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 2023ல், 6,043 வாகனங்களுக்கு, 1.29 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, வாகன உரிமையாளர்களிடம் வசூலிக்கப்பட்டுள்ளது என, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வசூல்
காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம், காரைப்பேட்டையில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் கட்டுப்பாட்டில், வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூர் என, மூன்று தாலுகாக்கள் உள்ளன.
இப்பகுதிகளில், வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆய்வின்போது, அதிக எடை கொண்ட வாகனங்கள், தகுதி சான்று இல்லாத வாகனங்கள், அதிக வேகம் என பல்வேறு வகையில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2023ல், ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான, ஒரு ஆண்டில், 6,043 வாகனங்களுக்கு, 1 கோடியே 29 லட்சத்து 85,758 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு உள்ளது.
விழிப்புணர்வு
இது குறித்து, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக, மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது:
காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில், சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில், இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனத்திற்கு ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், சாலை பாதுகாப்பு குறித்து வீடியோ படக்காட்சி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இதேபோல, அரசு, தனியார் பேருந்து டிரைவர்கள், ஆட்டோ, கார், வேன், லாரி என தனியார் வாகன ஓட்டுனர்களுக்கும், சாலை பாதுகாப்பு குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இது மட்டுமின்றி விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும்போது, சம்பந்தப்பட்ட ஓட்டுனர்களுக்கு விதியை மீறுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அறிவுரை வழங்கி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

