/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெளிவட்ட சாலை மேம்பால இறக்கத்தில் அடிக்கடி விபத்து
/
வெளிவட்ட சாலை மேம்பால இறக்கத்தில் அடிக்கடி விபத்து
வெளிவட்ட சாலை மேம்பால இறக்கத்தில் அடிக்கடி விபத்து
வெளிவட்ட சாலை மேம்பால இறக்கத்தில் அடிக்கடி விபத்து
ADDED : நவ 17, 2024 09:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் கனரக வாகனங்கள், இந்த சாலையில் அதிகம் செல்கின்றன.
இந்த சாலையில் முடிச்சூர், திருமுடிவாக்கம், குன்றத்துார், மலையம்பாக்கம் ஆகிய பகுதியில் மேம்பாலங்கள் உள்ளன. இந்த வழியே வேகமாக செல்லும் வாகனங்கள் மேம்பாலம் இறக்கத்தில், கட்டுப்பாட்டை இழந்து அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.
எனவே, வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், மேம்பாலம் இறக்கத்தில் விபத்து பகுதி என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.