/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆட்சிக்கு வர பொய் வாக்குறுதி தி.மு.க., மீது ஆவேச தாக்கு
/
ஆட்சிக்கு வர பொய் வாக்குறுதி தி.மு.க., மீது ஆவேச தாக்கு
ஆட்சிக்கு வர பொய் வாக்குறுதி தி.மு.க., மீது ஆவேச தாக்கு
ஆட்சிக்கு வர பொய் வாக்குறுதி தி.மு.க., மீது ஆவேச தாக்கு
ADDED : ஜன 30, 2025 12:11 AM

காஞ்சிபுரம் : பொய்யான வாக்குறுதிகளை அளித்து, மீண்டும் ஆட்சிக்கு வர அனைத்து விதமான ஏமாற்று வேலைகளிலும் தி.மு.க., ஈடுபடும் என, இளைஞர் பாசறை செயலர் காஞ்சிபுரத்தில் பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க., செயல்வீரர்கள் மற்றும் ஆலோசனை கூட்டம், தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் பாசறை செயலர் மணிவண்ணன் தலைமை வகித்தார்.
அ.தி.மு.க., காஞ்சிபுரம் மாவட்ட செயலர் சோமசுந்தரம், அமைப்பு செயலர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மைதிலி திருநாவுக்கரசு, பழனிஉள்ளிட்டோர் வரவேற்றனர்.
இளைஞர் பாசறைசெயலர் பரமசிவம் பேசியதாவது:
ஸ்டாலின், உதயநிதி ஆகிய இரு தீய சக்தி களிடம் இருந்து, தமிழகத்தை காக்க வேண்டியகடமை ஒவ்வொரு அ.தி.மு.க., தொண்டனுக்கும் உள்ளது. தி.மு.க., பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, மீண்டும்ஆட்சிக்கு வர அனைத்து விதமான ஏமாற்று வேலைகளிலும் ஈடுபடும்.
இதை யாரும் நம்ப வேண்டாம். தமிழகத்தில், தி.மு.க.,வை ஒழித்துவிட்டால் போதும்; மக்கள் நிம்மதியாக இருப்பர்.
இவ்வாறு அவர்பேசினார்.