/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ராஜகுபேரருக்கு ரூபாய் நோட்டு மாலை
/
ராஜகுபேரருக்கு ரூபாய் நோட்டு மாலை
ADDED : அக் 07, 2025 01:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், பவுர்ணமியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் அமைந்துள்ள ராஜகுபேரர் சுவாமிக்கு, 500 ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவிக்கப்பட்டு அலங்காரம் நடந்தது.
காஞ்சிபுரம் வெள்ளகேட், குபேரபட்டிணத்தில் ராஜகுபேரன் கோவில் உள்ளது. புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி மூலவர் ராஜகுபேரருக்கு 36 வகையான திரவியங்கால் அபிஷேகம் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களால் மாலை அணிவிக்கப்பட்டு, அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது.
உலக நன்மைக்காகவும், குடும்ப ஒற்றுமை, தொழில் சிறக்கவும், கடன் நிவர்த்தியடையவும், வரும் 20ம் தேதி தீபாவளியன்று சிறப்பு பூஜை நடக்கிறது என, கோவின் பரம்பரை நிர்வாக அறங்காவலர் ராஜகுபேர சித்தர் தெரிவித்தார்.