/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோவிலுக்கு தங்க முலாம் பூசப்பட்ட கிரீடம் காணிக்கை

ADDED : அக் 14, 2024 02:51 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே கோவிலான அஷ்டபுஜ பெருமாள் கோவில், 108 திவ்யதேசங்களில் ஒன்றாக திகழ்கிறது.
இக்கோவிலில், 2 கோடி ரூபாய்க்கு மேல், பல்வேறு திருப்பணி செய்யப்பட்டு, கடந்த பிப்., 26ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
இந்நிலையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெருமாள் பக்தர்கள், அஷ்டபுஜ பெருமாள் கோவிலுக்கு தங்க முலாம் பூசப்பட்ட கிரீடத்தை காணிக்கை வழங்க விரும்பினர்.
அதன்படி, 7 லட்சம் ரூபாய் மதிப்பில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நகைக்கடை வாயிலாக 6.400 கிலோ கிராம் எடை கொண்ட தங்க முலாம் பூசப்பட்டு, புதிதாக செய்யப்பட்ட கிரீடத்தை, கோவில் அறங்காவலர் குழுவினரிடம், முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக, புதிதாக செய்யப்பட்ட கிரீடம் சன்னிதி தெரு வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அஷ்டபுஜ பெருமாளுக்கு சாற்றப்பட்டது.