/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளிக்கு சென்ற 1-ம் வகுப்பு மாணவி மாயமானதால் சிறிது நேரம் சலசலப்பு
/
பள்ளிக்கு சென்ற 1-ம் வகுப்பு மாணவி மாயமானதால் சிறிது நேரம் சலசலப்பு
பள்ளிக்கு சென்ற 1-ம் வகுப்பு மாணவி மாயமானதால் சிறிது நேரம் சலசலப்பு
பள்ளிக்கு சென்ற 1-ம் வகுப்பு மாணவி மாயமானதால் சிறிது நேரம் சலசலப்பு
ADDED : ஜூன் 12, 2025 11:28 PM
குன்றத்துார்:குன்றத்துார் அருகே, பள்ளிக்கு சென்ற 1ம் வகுப்பு மாணவி மாயமானதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
குன்றத்துார் அருகே, இரண்டாம்கட்டளை ஊராட்சியில், அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு, சில தினங்களுக்கு முன், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த 7 வயது மாணவி, ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.
அந்த மாணவியை, நேற்று முன்தினம் காலை பள்ளியில் விட்டு பெற்றோர் சென்றனர்.
மதியம் மாணவியை அழைத்து வர சென்றுள்ளனர். அப்போது மாணவி பள்ளியில் இல்லாததால், கடத்தப்பட்டிருக்கலாம் என, அச்சம் பரவியது. இது குறித்து, குன்றத்துார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில், ஸ்கூட்டரில் வந்த பெண், மாணவியை அழைத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண்ணை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.
இதில், சாலையில் தனியாக சுற்றித்திரிந்த மாணவியை அழைத்து சென்ற அந்த பெண், இரண்டாம்கட்டளை பள்ளியில் இருந்து 1 கி.மீ., துாரத்தில் உள்ள தண்டலம் அரசு பள்ளியில் இறக்கி விட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, தண்டலம் பள்ளிக்கு சென்று பார்த்தபோது, மாணவியை தலைமை ஆசிரியர் பாதுகாப்பாக அமர வைத்திருப்பது தெரிய வந்தது.
புதிய மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருப்பதால், மாணவியின் பெற்றோர் வருவர் என, தலைமை ஆசிரியர் அந்த மாணவியை பள்ளியில் பாதுகாப்பாக அமர வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, மாணவியை மீட்ட போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் சிறிது நேரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.