/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பராமரிப்பு இல்லாத அங்கன்வாடி வளாகம்
/
பராமரிப்பு இல்லாத அங்கன்வாடி வளாகம்
ADDED : ஜன 02, 2024 08:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாட்டித்தோப்பு:காஞ்சிபுரம் மாநகராட்சி, தாட்டித்தோப்பு ரேஷன் கடை அருகில் இயங்கும் அங்கன்வாடி மையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.
முறையான பராமரிப்பு இல்லாததால், அங்கன்வாடி கட்டடத்தின் பின்பக்கம் மற்றும் இரு பக்கவாட்டு பகுதியில் செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளன. இதனால், புதரில் மண்டியுள்ள விஷ ஜந்துக்கள் அங்கன்வாடி மையத்திற்குள் செல்லும் சூழல் உள்ளதால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, அங்கன்வாடி மையத்தை சுற்றி மண்டி கிடக்கும் புதர்களை அகற்றி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.