/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொழிற்சாலை வாயிலில் துாங்கிய கொத்தனார் லாரி ஏறி உயிரிழப்பு
/
தொழிற்சாலை வாயிலில் துாங்கிய கொத்தனார் லாரி ஏறி உயிரிழப்பு
தொழிற்சாலை வாயிலில் துாங்கிய கொத்தனார் லாரி ஏறி உயிரிழப்பு
தொழிற்சாலை வாயிலில் துாங்கிய கொத்தனார் லாரி ஏறி உயிரிழப்பு
ADDED : அக் 26, 2024 08:02 PM
ஸ்ரீபெரும்புதுார்:திருச்சி மாவட்டம், மேலசிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது, 48; கொத்தனார். ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தங்கி, கட்டட வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, அறையில் புழுக்கமாக இருந்ததால், தொழிற்சாலை நுழைவாயிலில் படுத்து துாங்கினார். நள்ளிரவு தொழிற்சாலை கட்டுமான பணிக்காக ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி, நுழைவாயிலில் படுத்திருந்தவர் மீது ஏறி இறங்கியது.
இதில், சகுல் ஹமீது உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.